முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி



தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இணைந்து நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று (21.12.2022) தொடங்கி 3 நாட்கள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

இதில் முதல் போட்டிகளில் திருநெல்வேலி மண்டல அளவில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், விளையாட்டு போட்டிகளில் ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றிபெற முடியும், அதே போல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். அதேபோன்று நாம் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்தால் நமது வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழ  முடியும். வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும். தோல்வியை கண்டு சோர்வடையாமல், அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டாலே வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். நமது ஆரோக்கியமே நமக்கு மிகப்பெரிய சொத்தாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வலிமையானது, உங்களது நல்ல எண்ணங்களே உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும். ஆகவே மாணவ மாணவிகளாகிய நீங்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனையாளர்களாக வரவேண்டும் என்று வாழ்த்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.



இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் துணை இயக்குநர் முனைவர் திரு. வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

இப்போட்டியில் திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் திரு. செல்வகுமார், வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழக மேற்பார்வை பொறியாளர் திரு. வேதநாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. அந்தோணி அதிசயராஜ், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் திரு. ராதாகிருஷ்ணன், திரு. லெட்சுமணன், திரு. அருள் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சிவக்குமார், திரு. பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பல தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்