தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. சமத்துவ பொங்கல்



பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை வாளாகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று (14.01.2023) காவல்துறையினருடன் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்.



அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.

 

இவ்விழாவில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  திரு. ஜெயராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் திரு. சாகுல் சிராஜூதீன், பொருளாளர் திரு. மூசா, உறுப்பினர் திரு முகம்மது உவைஸ், திரு. ஹரிசங்கர் பட்டர், திரு. கண்ணன் சிவம், மது ஒழிப்பு சபை செயலாளர் அருள் தந்தை திரு. ஜெயந்தன். டீ. கிரேஸ் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்