நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம்.

 


நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம்.

14 - 1 -2023 சனிகிழமை அன்று  காலையில் , தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில்  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி சார்பாக நாசரேத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி சிலம்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் டென்னிசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். புது பானையில்  மாணவ மாணவிகளால்  பொங்கல்  விடப்பட்டது. 

அனைத்து சிலம்ப மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சிலம்பம் சுற்றி தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக உற்சாகத்தோடு கொண்டாடினர்.

 பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அஇஅதிமுக வார்டு செயலாளர் பெரியதுரை,12 வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், குமார்,ஜெய்சங்கர், உலக ஆனந்தன், மாஸ்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்