முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"அப்பாவின் இரண்டாவது மரணம்" என்ற சிறுகதை நூல் பற்றிய ஆய்வு

தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 11-ஆவது நிகழ்வு கடந்த ஞாயிறு(21.01.24) அன்று தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தில் உள்ள சித்திரக்கூடம் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்-

நாசரேத்தைச் சார்ந்த தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதிய "அப்பாவின் இரண்டாவது மரணம்"  சிறுகதை நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் கவிஞர் சைமன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

தூத்துக்குடியைச் சார்ந்த தமிழாசிரியர் முனைவர் சு.முருகன் மற்றும் நாசரேத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் இருவரும் நூலைக்குறித்து சிறப்பாக ஆய்வு செய்து பேசினர்.

மூக்குப்பேரி கவிஞர் தேவதாசன்,நாசரேத்தைச் சார்ந்த மேனாள் பேராசிரியர் காசிராசன் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

புலைவர் சு.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிது நிறைவுற்றது.

பேரவையின் சார்பில் நூலாசிரியருக்கு சான்றிதழுடன் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.


தோழமையுடன்-

நெல்லை தேவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...