தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
13-07-2025 ஞாயிற்று கிழமையன்று தூத்துக்குடி
ஆயர் இல்ல இளையோர் அரங்கில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை மற்றும்
காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது
வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அருட்தந்தை செல்வராசு தலைமை
வகித்தார். பணி நிறைவு தமிழாசிரியர் புலவர் முத்துசாமி வரவேற்புரை
நிகழ்த்தினார்.
தூத்துக்குடி
கவிஞர் நெல்லை தேவனின் 'வலிகளின் ஊர்வலம்' என்ற கவிதைத் தொகுப்பு நூலை
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர்
அறம் வெளியிட,தமிழ்ச் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் பெற்றுக்
கொண்டார். தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் மற்றும் திருச்சி
எழுத்தாளர் ஏகரசி தினேஷ் ஆகியோர் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினர்.
பணிநிறைவு
ஆசிரியர் அல்பர்ட், பணி நிறைவு நெடுஞ்சாலைத்துறை கவிஞர் செல்வராஜ்,
பணிநிறைவு வங்கி மேலாளர் மாணிக்கவாசகம், இலக்கிய ஆர்வலர் லாரன்ஸ், தமிழ்
இலக்கிய பேரவைச் செயலர் அருமைநாயகம், அரங்கக்கலைப் பயிற்றுநர் கலைவளர்மணி
சக்திவேல், குறும்பட இயக்குனர் அருந்ததி அரசு, கவிஞர் செந்தில்குமார்,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 'வலிகளின் ஊர்வலம்' நூலாசிரியர், கவிஞர்
நெல்லை தேவன் ஏற்புரை நிகழ்த்தினார்.
தொடுவானம்
கலை இலக்கியப் பேரவை சார்பில், இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் தலைவர்
டாக்டர் கொ. மா.கோதண்டத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,
முத்தாலங்குறிச்சி காமராசுவிற்கு தொடுவானம் இலக்கியச்சுடர் விருதும்,
தூத்துக்குடி சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சங்கருக்கு தொடுவானம்
கலைச்சுடர் விருதும் வழங்கிச் சிறப்பித்தனர்.
விழா நிறைவில், பணிநிறைவு
கருவூலத்துறை செய்யது முகமது ஷெரீப் நன்றி கூறினார். விழாவில்
எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக