பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

   
04-01-2019 வெள்ளி கிழமை :  தூத்துக்குடியில் கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்கானிப் பாளர் திரு.முரளி ரம்பா அவர்கள்   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து  மாணவிகளின்  மத்தியில்   விழப்புணர்வு குறித்து உரையாற்றினர்.  பாலின உணர்வு திறன் தொடர்பான விழிப்புணர்வு , சுற்று புற சூழல், சுகாதாரம், மன ஆரோக்கியம், புகார், மற்றும்  தீர்வு கானுதல்,  கலாச்சார நெறிமுறைகளை பின்பற்றுதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு மாணவிகளுக்கு வழங்கப்பட து. இந்த லிழாவை ஏ பி.சி மகளீர் கல்லூரி நிர்வாகம் .  சிறப்பான  ஏற்பாடுகளை செய்திருந்தது.