துப்புரவு பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி பணி மற்றும் துப்புரவு பணியாளர் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

                         தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதி மற்றும் பணியாளர்கள் நல வாழ்வு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஷிர்மணி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.இது இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் திட்ட மதிப்பீடு அவற்றின் நிலை ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது மேலும் மாவட்டத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் புதுவாழ்வு திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துணை ஆட்சியர் சிம்ரன் சிங் மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.