தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், இரு சக்கர வாகன ஒட்டிகள், நடை பயிற்சி செய்பவர்கள் நாய்களின் தாக்குதல், நாய்கள் சண்டையிடுவதால் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே விழுந்து விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் சில தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு நோய் ஏற்பட்டு முடி உதிர்ந்து எச்சில் வடியும் தோற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்களுக்கு தொற்று போய் பரவாமல் கட்டுபடுத்தவும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தெருவில் சுற்றி திரியும் நாய்களால் ஏற்படும் தாக்குதல், ஆபத்து மற்றும் விபத்து ஏற்படாமல தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடலடிக்கை எடுக்குமா?என்பது பொதுமக்கள் மற்றும் - சமூக ஆர்வலர்களின் எதிர் பார்பாக உள்ளது.