முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அருகே ஆலையில விபத்து- ஓருவர்பலி

     தூத்துக்குடி அருகே  உள்ள மகா சிமெண்ட் ஆலையில் விபத்துக்குள்ளாகி பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

      தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூர் கிராம பகுதியில் மகா சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு நெல்லை மாவட்டம் சங்கனாபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அருணாச்சலம் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஆலையில் 57 அடி உயரத்தில் இருந்து தவறிவிழுந்து படுகாயம் அடைந்துள்ளதாக கூறி அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இறந்து போன அருணாச்சலம் என்பவர் ஆலையின் வரித்துறை நிர்வாகத்தில் மேலாளராக உள்ளார். அலுவலக பணியாளராக இருக்ககூடிய இவர் விபத்தில் சிக்கியுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
         மேலும் ஆலையில் ஒரு அலுவலக பணியாளர் விபத்துக்குள்ளாகி இறக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகளோடு ஆலை இயங்குகிறதா? இவ்வாறு பாதுகாப்பு குறைப்போடு ஆலை இயக்கப்படுவது எப்படி?என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நல பாதுகாப்பு துறை உரிய சோதனைகள் நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்