முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள்

ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள் விழா கொண்டாடும் விதமாக தூத்துக்குடி பரதர் நல சங்கம் சார்பாக 13-11-2019 புதன் கிழமை மாலை பத்திரிககையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது
   
   தூத்துக்குடி மாநகரம் இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சிகளை கண்டு வந்திருக்கிறது என்றால்...தூத்துக்குடி வளர்ச்சியை   நூறாண்டுகளுக்கு முன்பாக தொலைநோககு மற்றும் தியாக சிந்தனையோடு தனது அர்பணிப்பால் செயலாற்றியவர் தான்
மரியாதைக்குறிய தூத்துக்குடிமாநகர தந்தை ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள்;  இவர் தனது சொந்த முயற்சியில்
வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டுவந்து நமது தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் கோமான் அன்னரின் 150 வது
பிறந்தநாள் வருகின்ற  நவ்வம்பர் 15ம் தேதி ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  இனிப்புகள் வழங்கப்படுவதாகவும் 16 ம் தேதி தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்திற்கு அருகில் உள்ள “ஸ்னோ ஹாலில் வைத்து  கொண்டாட உள்ளது   
      இந்த விழாவில உயர்திரு J.P,L பொனோ வென்சர் ரோச் அவர்கள் தலைமையில் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் புகழ் பரப்பும் வண்ணம் உள் அரங்க பொது கூட்டமும், 150வது பிறந்த நாள் சிறப்பு மலரும் வெளியிட இருப்பதாகவும். மேலும் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் நினைவாக  தமிழக அரசு மணிமன்டபம் அமைத்து அவரின பிறந்தநாளை அரசு விழாவாக  கொண்டாட ஆவண செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக பரதர் நல சங்க அவைத்லைவர் திரு.ஞாயம் ரொமாலட் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பரதர் நலசங்க தலைவர் ஐானசன், பொதுசெயலாளர் கனகராஐ—பொருளாளர் பியோ கர்டோசா,துணைத்தலைவர் ஐானசன், கல் மோத்தா.,ராயப்பன் இருதயராஐ, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்