முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வந்து போகும் இரு சக்கர வாகனம் ... தினமும் நொந்து போகும் பொதுமக்கள் .

             
 தூத்துக்குடி  புதிய பேருந்து  நிலையம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பகம்  இயங்கி வருகிறது.   இது முன்பு தனியாரால் நடத்தப்பட்டு  தற்போது மாநகராட்சி நிர்வாகமே  இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தை இயக்கி வருகிறது. புதிய பேருந்து நிலைத்துக்கு வரும் பயணிகளுக்கு  இந்த இரு சக்கரவாகன பாதுகாப்பகம் அதிகம் பயன் உள்ளதாக இருக்கிறது.                                                    
            இந்த வாகன பாதுகாப்பகத்தில் இரு சக்கர வாகனத்தை கொண்டு வருகின்ற வாடிக்கையாளரிடம் 12 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம்  என வசூல் செய்யப்படுகிறது . இந்த வாகன பாதுகாப்பகத்தில்  நுழைவு வாசல் ஒன்றும் வெளியேற மற்றொறு வாசல் என   அமைக்கப்பட்டுள்ளது..  நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்களின் எண் மற்றும் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு போன்ற டோக்கன் வழங்கப்படுகிறது.   முற்றிலும்   நவின படுத்தப்பட்ட இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில்  அடிப்படை வசதிகள் என்பது முற்றிலும் இல்லை.    சீரமைக்கப்படாத  கரடு முரடான தரை, ஒழுங்கற்ற வரிசை, இரவு நேரத்தில் போதிய  மின் விளக்கு  வசதி இல்லை,   பாதிக்குமேல் மேற்கூரை  இல்லாததிறந்த வெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்ற நிலை தொடர்கிறது.  மேலும்  திருமண முகூர்த்தநாளில்...வாகணங்களின் எண்ணிக்கை  அதிகமாவதால் ...வாகணநெரிசல் ஏற்பட்டு இரு சக்கரவாகணம்  ஒன்றுக்கொன்று  பின்னி சிக்கிக்கொள்வதால் இருசக்கர வாகனத்தை வெளியே எடுப்பதில்  சிரமமும்  ஏற்படுவதுடன் . வாகணங.கள். அதிகமாக சேதம் அடைகிறது.  வாகண பாதுகர்ப்பகத்தில்  ..நிர்வாகத்தின் அறிவிப்புகள்  மற்றும்  வழிகாட்டல்கள்  பொதுமக்கள் பார்வையில் படும்படி ஆங்காங்கே வைக்கவேண்டும்.

            எனவே   தூத்துக்கடி மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும்  இந்த இருசக்கர வாகண பாதுகாப்பகம்  முறையாக சீரமைக்கபட்டு  போதிய விரிவாக்கம்  செய்யப்படவேண்டும்.   என்பது  பொது மக்களின் எதிர்பாக உள்ளது.  இது தொடர்பாக  மாநகராட்சி நிர்வாகம்  உடனடியாக நடவடிக்கை எடுக்கமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்