முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று முதல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்பு



மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மரக்கன்று நடுகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோட்டையில் நடைபெறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்