தூத்துக்குடிS.M.S இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகத்தின் தரச் சான்றிதழ்


S.M.S. இசை - மற்றும் நடன பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அண்ணாமலை பல்கலைகாகத்தின் தரச்சான்று09-02-2020 ஞாயிறு அன்று  தூத்துக்குடி எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக தரச் சான்றிதழ் வழங்கும் விழா  தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் பி. பி. எம். டி தங்கராஜ் , ஸ்பீடு டேபிள் டென்னிஸ் அக்கடமியின் உரிமையாளர் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவ மாணவியர்களை, பாராட்டினார். கஸ்டம்ஸ் முரளி அவர்கள் கலை சார்ந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதால்... பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கலைத்திறன் மிக்க தலைமுறையினராக உருவாக்கிட வேண்டும் என்று தனது சிறப்புரையில் வழங்கினார். . இந்த விழா ஏற்பாடுகளை எஸ்எம்எஸ் இசை மற்றும் நாட்டிய பள்ளியின் நிர்வாகிகள் திரு. கணேசன் மற்றும் திருமதி.மாரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் இந்த விழாவிற்கு ஏராளமானோர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர் .

கருத்துகள்