முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வெனி மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

                             
                                                                  தூத்துக்குடி மாவட்டத் தில்            தனியார்  (SETC )பணிபுரிந்து வநத 
பீகார் மாநிலத்தை சேர்ந்த 263 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்ல
திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் 10 சிறப்பு பேருந்துகளில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) வழிஅனுப்பி வைத்தார்.          
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:                                            
       தூத்துக்குடிமாவட்டத்தில்கொரோனா வைரஸ் நோய் தொற்றால் 33 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு நபர்சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 6 நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேர் சென்னை
கோயம்பேடு மார்கெட் பகுதியில்இருந்து வந்தவர்கள். மற்ற 4 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுஅவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன்தொடர்பில்இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8700 தொழிலாளர்கள்பல்வேறு இடங்களில் இருக்கின்றனர். குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு
வங்கம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு முதல்கட்டமாக திருநெல்வேலியில்
இருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் செல்கிறது. இந்த ரயில் திருநெல்வேலி ஜங்சன் ரயில்
நிலையத்தில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படுகிறது. நமது மாவட்டத்தில் இருந்து
ளுநுவுஊ தொழிலாளர்கள் 263 பேர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு
தேவையான உணவு வசதி, ரயில் டிக்கெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகஅவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது.
      நமது மாவட்டத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 140 தொழிலாளர்கள்அவர்களது சொந்த மாநிலத்திற்கு நாளை செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் செல்வதற்கு ரயில் நாளை புறப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில்
உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த 8700 தொழிலாளர்களில் 4170 நபர்கள் சொந்த
மாநிலத்திற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். இவர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக பட்டியலை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி, வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையானஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது என.தெரிவித்தார் ,                                                   தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்;ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வட்டாட்சியர்
திரு.செல்வக்குமார், ளுநுவுஊ நிறுவன துணைத்தலைவர் திரு.ராமமூர்த்தி, பொது மேலாளர்;
திரு.ரமேஷ், துணை பொது மேலாளர் திரு.ராஜேஷ்குமார் சர்மா, மனித வள மேம்பாட்டு மேலாளர் திரு.முருகேசன் மற்றும் காவல் துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள்
கலந்துகொண்டனா                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்