முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் 37 ம் அமைப்பு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் . தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்


தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் 37ம் அமைப்பு தினத்தை
முன்னிட்டு இரத்ததான முகாம் (06.05.2020)  நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு செய்தியாளர்களிடத்தில்
 தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுலின்படி கொரோனாதொற்று நோய்பரவமால்தடுக்கதீவிரநடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 27 நபர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 26 நபர்கள்நலம்பெற்றுவீடுதிரும்பியுள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இறந்துள்ளார். கடந்த 16நாட்களாக நமது மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயினால்எந்த ஒரு நபரும்பாதிக்கவில்லை. இருந்தபோதும் தினசரி சளி, காய்ச்சல் அறிகுறிடன் உள்ள நபர்கள் கண்டறியக்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 10 நோய் தடுப்பு பகுதியில் இருந்தது. இதில் 5 பகுதியில் 28 நாட்கள் முடிவடைத்ததால், அப்பகுதிகளில் படிப்படியாக கட்டுபாட்டுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாநில, வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் கணடறியப்பட்டு அவர்கள,; வீட்டிலே தனிமைப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்கெட்
பகுதியில் இருந்த 15 நபர்கள் மாவட்டத்தில் வருகை தந்ததாக தகவல் பெறப்பட்டது. இதில் 5 நபர்கள் கண்டறியப்பட்டு வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
         ஊரடங்கு காரணமான பல்வேறு மாவட்டங்களில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இரத்தம் தேவையான அளவு கிடைக்காமல் உள்ளது. நமது மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சைகள மேற்கொள்ள அதிகமான இரத்தம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 37ம் அமைப்பு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் இரத்த வங்கியில் தேiவாயான இரத்தம் இருப்பில் வைக்க முடியும். மேலும் நமது மாவட்டத்தில் தன்னார்வலர் மூலம் இரத்தானம் முகாம் நடத்திட ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
          கொரோனாதொற்றுநோயினால் புதியதாக  ஒரு நபரும் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் திரு.செந்தூர்ராஜன், மாவட்ட செயலாளர் திரு.முருகன், மாநில துணைத்தலைவர் . திரு.வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் திரு.அண்ணாமலை பரமசிவன், வட்டாட்சியர்கள்திரு.செல்வகமார்(தூத்துக்குட), திரு.ஞானராஜ் (திருச்செந்தூர்) மற்றும்  தமிழ்நாடு அரசு சங்க உறுப்பினர்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...