முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: உறவினர்கள் கோரிக்கை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், தமிழக முதல்வருக்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புளியம்பட்டி அருகிலுள்ள கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் வேல்முருகன் (35). துபாய் நாட்டில் உள்ள RAS AL KHAIMAH என்ற இடத்தில், KHANBOLLI Electro Mechanical Cont LLC எனும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா நோயால் துபாய் நாட்டிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக இளைஞர் வேல்முருகன் தனது சக பணியாளர்களுடன் 10.05.2020 அன்று அவரது நிறுவனத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென்று மின்னழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். 

மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதனை உறுதி செய்துள்ளனர். இப்போது உடல் துபாயில் உள்ள மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்துள்ளனர். துபாயில் இருக்கும் வேல்முருகன் மனைவி மணிமேகலை தனது கணவரின் உடலைக் கூட பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேல்முருகனின் தந்தை சி.கதிர்வேல் மற்றும் குடும்பத்தினர் தங்கள் மகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்.டுமென, தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மூலமாக தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, மதிமு,க பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் கொடியன்குளம் கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். வேல்முருகன் உயிரிழந்த சோகத்தாலும், அவரது, உடலைக் கூட காண முடியாமலும் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்