முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்காவது கட்ட ஊரடங்கு பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாகியுள்ளனர். நாம் கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததே கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும்.

இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. இன்று 2 லட்சம் பிபிஇ சிறப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.இந்தியாவின் மாற்றங்களை உலகமே கவனிக்கிறது. அதேசமயம், நாமும் உலகைக் கவனித்து வருகிறோம். இந்தியாவின் மாற்றங்கள் உலகையே மாற்றியமைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. மனித குலத்துக்கான பல நன்மைகளை இந்தியா மேலும் செய்யும்.

நிலநடுக்கங்கள் உட்பட பல இன்னல்களை மக்கள் நிறைய பார்த்திருக்கிறார்கள். எனவே, நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும். இந்தியா தனித்தன்மை கொண்ட நாடு.பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் இந்தியாவின் 2 தூண்கள். இந்தியாவின் பலம் நம்முடைய ஜனநாயகம். இங்கு விநியோக அமைப்பு பாதிக்கப்படாது.

பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கியின் மூலம் ரூ. 20 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும். இதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றின அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும்.இந்த சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா நல்ல முன்னேற்றம் பெறும். அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இக்கட்டான சூழ்நிலையில் இது மிகவும் உதவியாக இருக்கும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும்.அதேசமயம், நாம் உள்நாட்டுப் பொருள்களை வாங்குவதில் கர்வம் கொள்ள வேண்டும். கதர் மற்றும் கைத்தறி வாங்கச் சொன்னபோது வெற்றிகரமாக செய்துகாட்டினீர்கள்.

கரோனா இன்னும் பல மாதங்கள் நம்முடன் இருக்கும். எனவே, எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.நான்காவதாக அறிவிக்கப்படவுள்ள பொது முடக்கம் வித்தியாசமாக மாறுபட்டதாக இருக்கும். இதுபற்றின விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.கரோனாவைச் சமாளித்துக்கொண்டே நாமும் முன்னேற வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. உங்கள் குடும்பத்தையும் உங்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...