முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து 713 பயணிகள் வருகை .





தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து இந்திய
கடற்படைக்கு சேர்ந்த INS  JALA S HWA  மூலம் வருகை தந்த தமிழகம்மற்றும்பிற
மாநிலங்களை சேர்ந்த 713 பயணிகளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக
பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்இன்று (02.06.2020) வரவேற்றார்கள். மேலும் பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன்
கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங் பணிகளையும் பார்வையிட்டார்கள்.
மேலும் பேருந்துகளின் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர்
அறையில் மாவட்ட வாரியாக பிரித்து, குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளைசோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள்
ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கும் பணிகளையும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர்
திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்
செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆபரேசன் சேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை
கப்பல் துயுடுயுளுர்றுயு கப்பல் இலங்கை கொழும்பில் இருந்து நேற்று 01.06.2020 அன்று713 பயணிகளுடன் புறப்பட்டு இன்று 02.06.2020 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குவந்தது. கடந்த 2 மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்களை இந்த
கப்பலின் மூலம் அழைத்து வரப்பட்டது. கப்பலில் இருந்து இறங்கியதுடன் பயணிகளுக்குஉடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று நோய்
அறிகுறிகள் உள்ள நபர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொரோனாதொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று இல்லலாதவர்களுக்கு
குடிவரவு நுழைவு மற்றும் உடைமை சோதனைகளை செய்து மாவட்டம் வாரியாக பிரித்துபேருந்துகளில் அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க்பபடுகிறது.இப்பணிகளுக்காக 25 பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வருகையை முன்னிட்டு ஏற்கனவே அந்தந்த மாவட்ட
ஆட்சித்தலைவர்களுக்கு பயணிகளின் விவரங்கள்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அவர்களது மாவட்டங்களுக்கு சென்று அடைந்தவுடன், அரசுதெரிவித்தள்ளவிதிகளின்படி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுதனிமைப்படுத்தப்படுகிறார்கள். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லாத நபர்கள்                                             வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நமது மாவட்டத்தை சார்ந்த 57 பயணிகளும்,
திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த 10 பயணிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரளாஉள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த 7 நபர்களும் இந்த கப்பலின் மூலம் இன்று வருகை
தந்தார்கள். கப்பல் மூலம் வருகை தந்த பயணிகளுக்கு அனைவருக்கும் காலை
உணவு, மதிய உணவு, தேவையான குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு
கழகத்தின் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பால கோபாலன்,
இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்
(வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங்
காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர்
திரு.பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எம்.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., துறைமுக
பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் திரு.ரவிகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, மாவட்ட உணவு பாதுகாப்பு
அலுவலர் மரு.மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சமூக
பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்ட
துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், டிராபிக் மேனேஜர் திரு.பிரபாகர்,
வட்டாட்சியர்கள் திரு.ரகு, திரு.சந்திரன், துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மரு.கிருஷ்ணலிலா, மாநகராட்சி நிர்வாக பொறியாளர் திரு.பார்திபன், தூத்துக்குடி நகர்
நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு
அலுவலர் திரு.சசிகுமார் மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள்;
கலந்துகொண்டனா                                      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்