முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

.ரூ 8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் . மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைப்பு


 குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ8லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகளை  ளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடியின் சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (31.07.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, கண்மாய் வடிகால் வாய்க்கால் தூர்வாரி கரை பலப்படுத்தும்  பணிகளை துவக்கி வைத்தார்.  
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிமராத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தினை தமிழகம் முழுவதும் செயல்படுத்திட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பல்வேறு கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் 37 கண்மாய்கள் ரூ.13.15 கோடி செலவில் தூர்வாரப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மழைநீரினை சேமித்து நிலத்தடி நீர் உயர்த்துவதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல்வேறு இடங்களில் கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது. மேலும் கண்மாய்களை தூர்வாறுவதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இந்த வகையில் இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. வடிகால் வாய்க்காலினை ஆழப்படுத்தி 4.8 கிலோமீட்டர் தூரம் கரைகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலினை சீரமைப்பதன்; மூலம் சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசலம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கண்மாயில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரினை வாய்க்கால் மூலம் கொண்டு சென்று பயன்படுத்தி விவசாயம் செய்து பயன்பெற முடியும்.  
ஏற்கனவே, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி நெடுங்குளம் கண்மாயில் தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதி ரூ.28.30 லட்சம் செலவில் கண்மாயினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கண்மாய், ஏரி, குளங்;கள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்துவதால் தண்ணீரினை அதிக அளவு சேமித்து வைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.செல்வகுமார், இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி துணை பொது மேலாளர் திரு.கௌதம், முதன்மை கட்டுமான மேலாளர் திரு.முருகேசன், கட்டுமான மேலாளர் திரு.ரமேஷ்பாபு, குலையன்கரிசல் விவசாய சங்க தலைவர் திரு.சுபாஸ் செல்வகுமார், செயலாளர் திரு.ஜெகன், கௌரவ தலைவர் திரு.சுரேஷ், முக்கிய பிரமுகர் முள்ளக்காடு திரு.அழகேசன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்