முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்

23.07.2020 
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம், தூய பனிமய 
அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகளில்பொதுமக்கள்கலந்துகொள்ள வேண்டாம். தங்களது வீட்டில் இருந்தே யூடுயுப் மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் வேண்டுகோள் 
--------------------------------------------------------------
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று(23.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில்இ தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்இ தூய பனிமய அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாகவும்இ திருவிழா நேரடியாக ஒளிபரப்புவது செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் செய்தியாளர்களிடம் 
தெரிவித்தாவது:                                                                                                                                                                                          
ஓவ்வொரு ஆண்டும் முத்து நகரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் 
திருவிழாவில் பனிமய மாதா பேராலய திருவிழா ஒன்றாகும். இந்த ஆண்டு 
நடைபெறும் தூய பனிமய மாதா திருவிழா 438வது ஆண்டு திருவிழாவாகும். தற்போது கொரோனா தொற்று நோய் காலத்தினை கருத்தில் கொண்டு கொடியேற்றம்இ தூய பனிமய அன்னையின் பெருவிழா உள்ளிட்ட நிகழ்ச்;சிகள் சமூக இடைவெளியை பின்பற்றி சில நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோயில் இருந்து நாம் 
விடுதலை பெற நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அரசு கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 
பல்வேறுநடவடிக்கைகளும்இகட்டுபாடுகளும் விதித்துள்ளது. இதனை நாம் 
அனைவரும் பின்பற்ற வேண்டும். கொடியேற்றம்இ தூய பனிமய அன்னையின் பெருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஆண்டு பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்த்து யூடுயுப்; மற்றும் தொலைக்காட்சி மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                    ஆகவே பொதுமக்கள் நேரடியாக பனிமயமாதா கோவிலுக்கு வருவதை தவிர்த்து தங்களது வீட்டில்     இருந்தே ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்து பிரார்த்தனை செய்யுமாறு 
கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க 
வேண்டும் என தெரிவித்தார். 
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் 
செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: 
 ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி பனிமயமாதா திருவிழாவில் 
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்வார்கள். இந்த 
ஆண்டு பனிமயமாதா திருவிழா நிகழ்ச்சி 26 ஜூலை முதல் ஆகஸ்ட் 5ம் தேதி 
நடைபெறுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜூலை 31ம் 
தேதி வரை சுய ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளார்கள். மேலும் பொதுமக்கள் 
அதிகமாக கூடும் இடமான திரையரங்கம்இ வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. ஆகவே இந்த ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழாவை பொதுமக்கள் நேரடியாக வந்து பிரார்தனை செய்ய அனுமதி இல்லை. 26ம் தேதி கொடியேற்றம் 
நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு பொதுமக்கள் வர அனுமதி இல்லை. மேலும் கொடியேற்றுவதற்கு சில நபர்கள் மட்டும் அனுமதி கேட்டுள்ளார்கள். அதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சில நபர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் கலந்துகொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மற்றும் பனிமய மாதா பங்குதந்தை அவர்களுடன்ஆலோசனைநடத்தப்பட்டது. 
அனைத்து நிகழ்ச்சிகளும் வழிபாட்டு தலத்துக்குள் செய்து கொள்ள அனுமதி 
அளிக்கப்பட்டுள்ளது.இந்தநிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்துகொள்ள 
அனுமதி இல்லை. மேலும் பனிமயமாதா பேராயலயம் மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடுயுப்; மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்புசெய்யஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் நேரில் வந்து நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை. பொதுமக்கள் அதிகமாக கூடும் 
பட்சத்தில் நோய் தொற்று ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் 
கருத்தில் கொண்டு தங்களது வீட்டில் இருந்தே நேரடி நிகழ்ச்சிகளை பார்த்து 
பயன் பெற வேண்டும். வருகிற ஞாயிற்றுக்கிழமை 26ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு மாண்புமிகு 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே 
பேராலயத்துக்கு பொதுமக்கள் நேரடியாக வருகை தருவதை தவிர்க்க வேண்டும். 
சுமார் 700 காவல் துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.  ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்கள் நேரில் வர அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.                                                                                                                                                                                                          
 அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் செய்யும் இடத்தினை தூத்துக்குடி 
மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் 
நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.                                                                                                                                                                                  
 கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார், இ.கா.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாதா கோவில் 
பேரவை பங்கு தந்தை குமாரராஜா, மறைமாவட்ட முதன்மை குரு பங்கு தந்தை பன்னீர்செல்வம்,ஆயர்செயலாளர் பங்குதந்தைதினேஷ்மற்றும்அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்