முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் அமைச்சரிடம் கோரிக்கை மனு



மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28.7.2020) மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை,
தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.                                                                                                                                             
தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் தங்களது மனுவில், திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும்,  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் டிக்கெட் விலையை குறைக்க வேண்டியுள்ளதால் சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவிகித டடிஉயட bடினல நவேநசவயin     local body entertainment tax  முழுவதுமாக நீக்க வேண்டும் எனவும், தனியாக உள்ள சிறிய திரையரங்குகளை மினி ப்ளெக்ஸ் (அ) மல்டி ப்ளெக்ஸாக மாற்றுவதற்கு  பெறப்படும் அனுமதியினை எளிதாக்க வேண்டும் எனவும், திரையரங்குகளில் தற்பொழுது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால்,     Projector Operator- க்கு   வேலை இல்லாத சூழ்நிலையில்                ..                   திரையரங்குகளில்     Projector Operator Licence   பெற வேண்டும் என்ற முறையை முற்றிலும் நீக்க வேண்டும் எனவும், பொதுப்பணித் துறையிடமிருந்து  ஒவ்வொரு வருடமும் C-form licence  புதுப்பிக்க வேண்டும் என்ற முறையிலிருந்து மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம் அவர்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்டத் துறை அமைச்சர்களோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார்.                                                                                                                                                                                                
இந்நிகழ்வின்போது, திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.ஏ.சந்திரசேகர்,  தயாரிப்பாளர்கள் திரு.கே.ஆர்., திரு.டி.ஜி.தியாகராஜன், திரு.டி.சிவா, திரு.ஜி.தனஞ்செயன், திரு.கே.ராஜன், திரு.சுரேஷ் காமாட்சி மற்றும் திரு.லலித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்