முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குண்டு வீச்சில் மரணம் அடைந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் அனைத்து மரியாதையுடன் இறுதி சடங்கு



தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையில் வல்லநாடு அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழக காவல் துறை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப. தென்மண்டல சரக காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் காவல்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் சுப்பிரமணியம்  வல்லநாடு அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பணி மேற்கொள்ளும்போது ஏற்பட்ட இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் வழங்கவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாளவிளைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக காவல் துறை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். தென்மண்டல சரக காவல் துறை தலைவர் திரு.முருகன், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.தீபக்.மோ.டமோர், இ.கா.ப. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார், இ.கா.ப., ஆகியோர் உடலை சுமந்து வந்தனர். 

அவரது உடலுக்கு தமிழக காவல் துறை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப. தென்மண்டல சரக காவல் துறை தலைவர் திரு.முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.தீபக்.மோ.டமோர், இ.கா.ப. தென்மண்டல சரக காவல் துணை தலைவர் திரு.அபினவ்குமார், இ.கா.ப. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார், இ.கா.ப. திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர் திருமதி.அற்புதமணி மற்றும் காவல்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காவல் துறையின் சார்பில் 21 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தமிழக காவல் துறை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப. அவர்கள் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் திருமதி.புவனேஸ்வரி, தந்தை திரு.பெரியசாமி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் காவலர் குடும்பத்திற்கு அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் அவர்களின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்