முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : மாவட்ட திறன்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உரை

                                                                                          

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் மாவட்ட திறன்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் செப்டம்பர் 2020 மாதத்திற்கான மாவட்ட திறன்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (08.09.2020)  அன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் வேப்பலோடை ஆகிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு 15.09.2020 என்பதை அனைத்து தரப்பினருக்கும் தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற் பழகுநர் பயிற்சித்திட்டத்தினை முழுமையான அளவில் அமுல்படுத்துதல், குறுகிய கால பயிற்சித் திட்டங்களான அம்மா திட்டம்,   TNSDC, PMKVY 2.0, RPL   போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்க அனைத்து தொழில் நிறுவனங்களும் முன் வரும் வகையில் ஊக்கப்படுத்திட வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 12 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2020-க்கான சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால்,  www. skilltraining.tn.gov.in என்ற  இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    மேலும்;  NLC, ICF, CPCL  போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் பிரைவேட் ஜாப் போர்ட்டல் -ல் தொழிற் பழகுநர் தேவைக்காக பதிவு செய்த நிறுவனங்களுக்கு தேர்ச்சியடைந்தோர் பட்டியல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான நிறுவனங்களிலும் தொழிற் பழகுநர் மற்றும்   BTP பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்தும் கல்வி இடை நிறுத்தம் செய்த மாணவர்கள் பட்டியல் மற்றும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் பட்டியல்களும் பெறப்பட்டு அவர்களை ஐடிஐ-ல் சேர்க்க நடவடிக்கை எடுக்க மாவட்ட திறன் குழுவினரும், அலுவலர்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திருமதி.ரேவதி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, மாவட்;ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குநர் திருமதி.ம.பேச்சியம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் திருமதி.ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா, தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் திரு.எஸ்.பழனி,; அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள் திரு.ஆ.செல்லக்கனி(வேப்பலோடை), திரு. எஸ்.அருள், (திருச்செந்தூர்), திரு. ராஜன், (நாகலாபுரம்) மற்றும் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்