முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்த நாள் அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

  சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்த நாள் அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை



தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,  சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் உள்ள  திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

--------

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,  வ.உ.சி இல்லத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் இன்று (05.09.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார்,இ.கா.ப., விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சுதந்திர போராட்ட வீரர்கள் அதிகம் பேர் வாழ்ந்து மறைந்த புன்னிய பூமியாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான சுதந்திர போராட்ட வீரர் வாழ்ந்த மண்,  நமது புனித மண் ஆகும். ஒட்டப்பிடாரத்தில் பிறந்த செக்கிழத்த செம்மண் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளையரை எதிர்த்து சுதேசி கப்பல் கம்பெனி நடத்தியவர். அதன் விளைவாக எண்ணற்ற துயரங்களை அணிவித்து நாட்டுகாக சிறையிலேயே தனது வாழ்நாளை கழித்து தனது இன்னுயிரையும் இழந்தார். வ.உ.சி அவர்களின் பெயர் என்று நினைத்து இருக்கும் வகையில் மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்கள் வ.உ.சி அவர்களுக்கு திருநெல்வேலியில் மணிமண்டபம் அமைத்ததுடன் அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அரசுடமையாக்கப்பட்ட அவரது இல்லத்தில் முழுவுருவ வெண்கல சிலையும் திறந்து வைத்தார்கள். அவரது பிறந்த நாளான செப்டம்பர்-5 அன்று தமிழக அரசின் சார்பில்  ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வ.உ.சி அவர்களின் 149 வது பிறந்த நாளில் தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுபற்றுடன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் வ.உ.சி அவர்கள். அவரது நாட்டுபாற்றினை அனைவரும் அறிந்து பின்பற்றிட  வேண்டும் என்பதற்காக அவரது நினைவை பொற்றும் வகையில் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் வ.உ.சி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது வாழ்ககை வரலாற்று புகைப்படத்தினை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெப்பமிட்டார். 

முன்னதாக ஒட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியார் திருமதி.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன்,  ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் திரு.ராகு, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திருமதி.எலிசபெத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கெலென், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.கேசவமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு அச்சக குழு தலைவர் திரு.அன்புராஜ்,  மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், கருங்குளம் ஒன்றிய துணைத் தலைவர் திரு.லெட்சுமண பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினார் திரு.தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.அழகிரி (எ) கோபி, வ.உ.சி அவர்களின் வாரிசு திருமதி.செல்வி முக்கிய பிரமுகர்கள் திரு.ஜவகர், திரு.முத்துசாமி, திரு.சுடலைமணி, திரு.முருகேசன், திரு.எம்.எஸ்.கண்ணன், திரு.பரமசிவம், திரு.கருப்பசாமி, திரு. ஆலோசனை மரியான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்