மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் : அமைச்சர் வழங்கினார்

         

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்.
------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடன் உதவிகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும் வழங்கினார். 
நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                                                                                                                                                                                                                                                                                                         
நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மார்ச் மாதம் தொடங்கி கடந்த 6  மாதங்களாக கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு இருந்தாலும் கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து உள்ளது. தமிழகம்தான் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான, தேவையான சிகிச்சை அளித்ததன் காரணமாக இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.  
மார்ச் 23 சட்டமன்றம் முடிவுற்று அன்றில் இருந்து தொடர்ந்து மாண்புமிகு முதலமச்சர் அவர்கள் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் ஆய்வு கூட்டங்கள் நடத்தி கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்து அவைகளை விரைவாக செயல்படுத்தி வருகிறார்கள். அதே நேரத்திலே மக்களுடைய வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லி மாவட்டம்தோறும் கொரோனா தொற்று உலகளாவிய பிரச்சனையாக இருந்தாலும்கூட வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படக்கூடாது, இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்பதற்காகவும், மாவட்ட வாரியாக நேரடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்று இந்த கொரோனா காலத்திலேயே ஆய்வு கூட்டங்களை நடத்தி இந்திய அளவிலே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த சீரிய நடவடிக்கைகள் காரணமாகத்தான் தமிழகத்திலே கொரோனா குறைந்த சதவீத இறப்பு கொண்ட மாவட்டம் என்ற நிலையில் உள்ளது. மேலும் தொடர்ந்து நோயின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட தினசரி 200, 300 என்று பாதிப்பு இருந்த நிலையில் இன்று நிலைமாறி 100க்கும் கீழாக பாதிப்பைக்கொண்ட மாவட்டமாக நமது தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 
தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலோடு கொரோனா நோய் தொற்றை தவிர்க்க  மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகள் எடுத்தால்கூட மக்களின் வாழ்வாதாத்தை கருத்தில்கொண்டு அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளின் போது மக்கள் விழிப்புணர்வோடு உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தல், கட்டாயம் முககவசங்கள் அணிதல் உள்ளிட்டவைகளை முறையாக கடைபிடிக்கும்போது நமது மாவட்டம் கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டம் என்ற சிறப்பு நிலையை அடைய முடியும் என்பதை மக்களும் உணர வேண்டும்.
இன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு என்று மாவட்டத்தின் வளர்ச்சி நிதி கனிம வளத்துறை மூலமாக ரூ.4.25 லட்சம் பெற்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட  பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பாக்குமட்டையிலே பிளேட் தயாரிக்கும் தொழிலை துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக விளாத்திகுளத்தில் இசைமாமேதை நல்லப்பசுவாமிகள் இசைப்பள்ளி; தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். தற்போது இங்கு ரூ.24 லட்சம் மதிப்பில் இசைப்பள்ளி தொடங்குவதற்கு தேவையான அரங்கம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.20 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு  பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக் விவசாயிகளுக்கு, சுய உதவிக்குழுக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ரூ.40 லட்சம் கடன் உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறது என தெரிவித்தார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.ரவிசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.ரமணிதேவி, எட்டயபுரம் நடுவிற்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் திரு.ஆழ்வார் உதயகுமார், செயலாளர் திரு.ராமையா, எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கணேசன், முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துறைபாண்டியன், திரு.மாரிமுத்துபாண்டியன், திரு.கணபதி, திரு.மாரியப்பன், திரு.கருப்பூர் சீனி, திரு.சோலைச்சாமி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

.

கருத்துகள்