முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம்




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (19.09.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவினை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி ஐஏ -க்கான தேர்வில் தேர்ச்சி பெற்று இணைய வழி கலந்தாய்வில் கலந்துகொண்டு நியமன ஆணை பெறும் உங்களின் வாழ்வில் இன்று முதல் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது. இளநிலை உதவியாளர் பணி மிக முக்கிய பணி ஆகும். பல்வேறு முக்கிய கோப்புகளை கையாள வேண்டியிருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன உத்தரவினை வழங்கி தமிழகம் முழுவதும் 633 நபர்களுக்கு உத்தரவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்டங்களில் அமைச்சர்கள் மூலம் இந்த உத்தரவுகள் இன்றே வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நமது மாவட்டத்தில் 22 நபர்களுக்கு தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் வகையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நியமன ஆணை பெறும் உங்களின் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல் ஆகும். எட்டயபுரம் புரட்சிக்கவிஞர் பாரதியார் வாழ்ந்த மண்ணில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இன்னும் நீங்கள் மேலும் பல்வேறு தேர்வுகளை எழுதி உயர்ந்த பதவிகளை பெற வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன்இ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர்இ முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரிஇ கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயாஇ கூட்டுறவு அச்சக தலைவர் திரு.அன்புராஜ்இ எட்டயபுரம் கூட்டுறவு சங்க தலைவர் திரு.ஆழ்வார்உதயகுமார்இ மாவட்ட கல்வி அலுவலர் திரு.முனியசாமிஇ பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.அனிதாஇ உதவி திட்ட அலுவலர் திரு.சுப்பிரமணியம்இ ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.கோபி(எ)அழகிரிஇ முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார்இ திரு.வண்டானம் கருப்பசாமி மற்றும் அலுவலர்கள்இ முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்