முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு , பேரிடர் மீட்புப் படை மற்றும் அதற்கான உபகரணங்களை மாவட்ட காவல் துறை எஸ்.பி ஆய்வு ,

 





வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை  காப்பாற்றுவதற்கான பேரிடர் மீட்புப் படை பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார். 


 வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக என்னென்ன பொருட்கள் இருக்கிறது. அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை (ளுவயவந னுளையளவநச சுநளஉரந குழசஉந) பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் இன்று (17.09.2020) மாலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார். 


இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து  இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், (ஐகெடயவயடிடந டிழயவள),  காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (ஐகெடயவயடிடந டiபாவள) வலுவான தூக்குப்படுக்கைகள் (குழசவயடிடந ளவசநவஉhநச), முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. 


 அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்  அவர்கள் பேசுகையில், கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் தாழ்வான பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை தெரிவித்துள்ளார். அவ்வாறு தெரிவித்துள்ள பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம். இந்த மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் மற்றும் பேரிடம் மீட்பு உபகரணங்களை இன்று அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பிவிடுவோம். எந்த வித வெள்ளம் வந்தால் கூட உடனடியாக மக்களை அல்லது உயிரினங்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கிறது என்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார். 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆய்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், உடனிருந்தார். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன் தலைமையில் பேரிடர் மீட்பு படையினர் தங்கள் உபகரணங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன் செயல்முறை விளக்கமளித்தனர்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்