முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீன்வளத்தினை பெருக்கிட மானியம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

 


தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தினை பெருக்கிட மானியம் வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------------------------------------------------------------------------------


      தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தினை பெருக்கிட 2020-2021-ம் நிதி ஆண்டு முதல் 2024-2025 –ம் நிதி ஆண்டு வரை ஐந்து நிதி ஆண்டுகளுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுபிரிவினருக்கு 40மூ சதவீத மானிய உதவியும், தாழ்த்தப்பட்டஃ பழங்குடியினருக்கு மற்றும் பெண்களுக்கு 60மூ மானிய உதவியும் புதிய மீன் மற்றும் இறால் பண்ணைக்குட்டை அமைத்தல், உயிர்கூழ் முறையில் மீன்வளர்ப்பு செய்தல், வண்ணமீன் வளர்ப்பு திட்டம், மீன்விற்பனை செய்பவர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி வழங்குதல், கடற்பாசி வளர்த்தல், கூண்டுகளில் மீன்வளர்த்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான படகுகள், ஒருங்கிணைந்த கடல் வண்ண மீன்வளர்த்தல், மற்றும் கடல்; வண்ணமீன் சேகரித்தல் ஆகியவைகளுக்கு வழங்கப்படவுள்ளது.                                                                                                                                         

  மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352  என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.         


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்