முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது : 6 பைக்குகள் பறிமுதல் - தனிப்படைக்கு எஸ்.பி - பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

.




தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது  இரு சக்கர வாகனம்  நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்வமதுகரன் என்பவரது  இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும் கடந்த 31.07.2020 முதல் 19.09.2020 வரை மேற்படி 6 பேர்களது இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு ஒரே பகுதியில் தொடர்ந்து நடந்து வந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தெர்மல்நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கோகிலா, உதவி ஆய்வாளர்கள் திரு. ராமகிருஷ்ணன், திரு. பென்சன் மற்றும்  தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஜெனிவர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.   

 

அதன்பேரில் மேற்படி தனிப்படையினர் தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் வாகனம் திருடுபோன நேரங்களை கணக்கிட்டு எதிரிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் இன்று (05.10.2020) காலை 11.00 மணிக்கு மீண்டும் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே ஹார்பர் ரோட்டில் வாகன தணிக்கை செய்தபோது,  இரு சக்கர வாகனங்களை திருடும் எண்ணத்துடன் வந்த திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (24) மற்றும் தச்சநல்லூர் மேலக்கரை நியூகாலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சக்தி கணேஷ் (24) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து விசாரிக்க அவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களில் தெர்மல்நகர் காவல்நிலைய சரக பகுதிகளில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 


துரிதமாக செயல்பட்டு இரு சக்கர வாகன திருட்டில்  ஈடுபட்ட இருவரை   கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்த தெர்மல் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்