முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை : அதற்கான முன். ஏற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு



தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை : அதற்கான முன். ஏற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் ஆய்வு செய்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு  பணிகள்  குறித்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் இன்று (10.10.2020) நேரில் ஆய்வு  மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெறும்; அரங்கங்கள், திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் புகைப்படக்கண்காட்சி அரங்கு அமைக்கப்பட உள்ள இடங்களிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்;த மார்ச் 23ந்தேதி  சட்ட மன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் கொரனோ தடுப்பு பணிகளோடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.என்று மக்களை நாளும் பொழுதும் தமிழக மக்களை காக்க வேண்டும். எனவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக  மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கடந்த மாதம் நடந்த கொரனோ தடுப்பு நடவடிக்கை காணொலி காட்சி உரையாடலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பாரட்டினார்.

கொரனோ தடுப்பு நடவடிக்கை கால கட்டத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பணியை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து கொரனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து பல்வேறு நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.29 கோடி புற்று நோய் சிகிச்சை அளிக்கும் நவீன கதிர்வீச்சு கருவி மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள். இவ்வாறு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் சார்ஆட்சியர் திரு.சிம்ரோன் ஐPத் சிங் கலோன், இ.ஆ.ப.,அவர்கள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திருமதி.அமுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன்,  முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார், திரு.திருப்பற்கடல், திரு.காசிராஜன், திரு.செம்பூர் ராஜ் நாராயணன், திரு.அழகேசன், திரு.விஜயகுமார், திரு.வீரபாகு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்