முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காணமல் போன செல் போன்கள் காவல் துறையின் துரித நடவடிக்கையினால் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு :




காணமல் போன செல் போன்கள் காவல் துறையின் துரித நடவடிக்கையினால் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு :

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட தனிப்படையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 2019 முதல் இதுவரை காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் திரு. சுதாகரன், திரு. பெர்லின் பிரகாஷ், காவலர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையும், 

மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பெட்ரிக் ராஜன், நாலாட்டின் புதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்கள் திரு. மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. காசி மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. ரகு ஆகியோர் அடங்கிய மற்றொரு தனிப்படையும் அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். 

மேற்படி உத்தரவின்பேரில் 2 தனிப்படைகளும் இணைந்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 102 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (ஐஆநுஐ) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அதன்  உரிமையாளர்களிடம் இன்று (15.10.2020)  மாவட்ட காவல்; அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒப்படைத்தார். 

பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும், 

 இரு சக்கர வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஹெல்மெட் அணியாமல் தலையில் அடிபட்டு இறந்தவர்கள்தான் அதிகம். ஆகவே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவேண்டும். சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும், 

தற்போது தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஆகவே அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் உட்பட காவல்துறை அதிகாரிகள்,  காவல் ஆளினர்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்