கொரனோ தொற்று விதிமுறைகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமத்தில் உளள திருமணம் மண்டபத்திற்கு சீல்



தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவலாக மாறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது மேலும் தமிழக அரசு சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் அவசிய பணிகளுக்கு
மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போதுமுககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.                                                            


              . தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமத்தில்  லெட்சுமி மஹால் திருமணம் மண்டபத்தில்  (24.06.2020)அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சுமார் 300 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமலும், திருமண மண்டப வாசலில் சேனிடைசர், கிருமிநாசினி எதுவும் பயன்படுத்தபடாமலும் இருந்துள்ளனர்.


         மேலும், திருமண மண்டபத்திற்கு வந்த நபர்கள் முககவசங்கள், கையுறைகள் அணியாமல்,  300 பேர்கள்  கலந்து  கொண்டு உணவு அருந்தியதால்  கொரனோ தொற்று நோய்; பரவ வாய்ப்பு உள்ளதாலும், கொரனோ தொற்று விதிமுறைகளை மீறியதாக தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களின் அறிவுரைப்படி தூத்துக்குடி வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் லெட்சுமி மஹால் திருமண மண்டபம் இன்று (24.06.2020) மூடி சீல் வைக்கப்பட்டது.

   இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்