முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழஙக வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------------
கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக
தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில்,

குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் கடந்த 24.03.2020 முதல்30.06.2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும்,பொது இடத்தில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 இதற்கு மாறாக வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணியாமல் பொது  இடங்களில் நடமாடுபவர்களுக்கு முதன்முறையாக இருப்பின் காவல் துறையினர், மற்றும் உள்ளாட்சித்துறையினர் மூலம் ரூ.50ஃ-ம் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் அவ்வாறான நிலையில் பிடிபடின் ரூ.500ஃ-ம் உடனடி அபராதம் விதிக்கப்படும் எனவும் மூன்றாவது முறையாக இருப்பின் காவல் துறையினரால் வழக்கு பதிவு  செய்வதுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி கடும் நடவடிக்கைகள ;மேற்கொள்ளப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் ரூ.200ஃ- உடனடி அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.


 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மேலும் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகள், நகைகடைகள், மளிகை கடைகள், காய்கனி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்திருப்பதுடன்  தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல் போன்ற அனைத்து விதமான சுகாதார நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வருகை
தரும் பொதுமக்களையும் மேற்காண் வழிமுறைகளை தவறாது பின்பற்ற செய்ய உரிய   நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், இவ்வாறான உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள்ஃநிறுவனங்கள ; மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் எனவும், மேற்கண்ட வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஃ உள்ளாட்சித் துறையின் மூலம் அபராதம்
விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 மேலும் மேற்காண் வழிமுறைகளை கடைகள்ஃநிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யும் பொருட்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள்ஃநிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல், கடையினை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வருவாய்துறையினர், உள்ளாட்சித்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது.
 எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் இந்நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து அத்தியவாசிய காரணங்களின்றி வெளியிடங்களில் வருவதை பொதுமக்கள் தவிர்ப்பதுடன்,
சமூக இடைவெளியை கடைபிடித்தும், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றின ; மூலமும், முககவசம் அணிவதன் மூலமும், கொரோனா நோய் தொற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் இருக்க பொதுமக்கள், கடைகள்ஃநிறுவனங்களின்  உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளிக்க ேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...