முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்


துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
---------------------------------------------------------------------
தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர் பாசனமுறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, கீழ்;க்காணும் துணைநிலை நீர் மேலாண்மை பணிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு ஃ துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25000/-
டீசல் பம்புசெட் ஃ மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15.000 /-த்திற்கு மிகாமலும்.
வயலுக்கு அருகில் பாசனநீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசனகுழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தொகை எக்டருக்கு ரூ.10.000/-க்கு மிகாமலும்,
பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒருகனமீட்டருக்கு    ரூ.350/-க்கு மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40.000/-க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கான மானியம் பெறுவதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பெயரினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பணிகளை விவசாயிகள் முதலில் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இப்பணிகளுக்கான மானியம், நுண்ணீர்ப் பாசன அமைத்து மானியத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இத்துணைநீர் மேலாண்மைக்கான மானியத்தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிற்கு நேரிடையாக விடுவிக்கப்படும்.
புhசன நீரினை சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப் பாசன முறையினை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் ஆதார வசதியினை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்             திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...