தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஊக்க தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2,500 ஊக்கதொகையாக வழங்கப்படும்; - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
-------------------------------------------------------------- 

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகளை பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளால் குறிப்பாக கத்திரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி, பரங்கி, சுரை போன்ற காய்கறிகள்  அனைத்து வட்டாரங்களில்  பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
       
திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவு செடிகளின் விலை பட்டியல்,  கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற 10(1) அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை அந்தந்த வட்டார  தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பித்து பயன் அடையவும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும், திருச்செந்தூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9092861549),                         கயத்தார், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9751459404), விளாத்திகுளம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9600342052), கருங்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (9952628678), சாத்தான்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (7639516199), தூத்துக்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (6374275754), ஸ்ரீவைகுண்டம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (8807653887), ஆழ்வார்திருநகரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (6369389361), புதூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), கோவில்பட்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), ஒட்டப்பிடாரம், தோட்டக்கலை உதவி இயக்குநர், (9976531000), உடன்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர், (8248566263) தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்