முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

         


                                                                                                                                                                                                                    தமிழக  ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில்   அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு                                                                                                                                                                                                                                                            

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் புதிதாக கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

-------------------------------------------------------------------------------------------------------      

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் ரூ.277.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் கடந்த மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய வட்டாட்சியர் அலுவலகத்தினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சதன்பிரபாகர் பங்கேற்றார்.                                                                                                                                                       


மாண்புமிகு வருவாயத்துறை  அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வட்டாட்சியரிடம் வழங்கி உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களை  நில அளவைப்பிரிவு அலுவலர்கள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், கிராம உதவியாளர் சங்கத்தினர் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பாக  பணியாற்றி அரசுக்கும், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி.பிரியா குருராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திரு.அய்யப்பன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் திரு.திரவியம், கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ஜோதிபாசு, திரு.கருப்பசாமி, நில அளவை வட்ட துணை ஆய்வாளர் திரு.ஸ்டான்லி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் திரு.மாரிச்சாமி, திரு.சுப்பையா, கிராம உதவியாளர் சங்க மாநில பொறுப்பாளர் திரு.அய்யப்பன், முக்கிய பிரமுகர்கள் திரு.வினோபாஜி, திரு.குருராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

:                                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...