முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்

சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்  


தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 86,974 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார்கள். தொடர்ந்து மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சத்துணவு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்து சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தினையும் செயல்படுத்தினார்கள்.  அங்கன்வாடி மையங்களில் கலவை சாதம் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார்கள்.  சத்துணவு திட்டத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. 

தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவ திட்டத்தில் பயனடையும் மாணவ, மாணவிகளுக்கு சூடான சத்துணவு சமைத்து வழங்க முடியாத நிலை உள்ளதால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவாக தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா  3.100 கிலோ கிராம் அரிசியும், 1.200 கிலோ கிராம் பருப்பும், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா  4.650 கிலோ கிராம் அரிசியும், 1.250 கிலோ கிராம் பருப்பும் வழங்கிட உத்திரவிட்டு இத்திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்கள்.  அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளை திறக்க இயலாத காரணத்தால் உலர் உணவு பொருட்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு 10 முட்டைகள் வீதம் வழங்க உத்தரவிட்டு கடந்த வாரம்  சென்னையில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

  அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 55,426 மாணவ, மாணவிகளுக்கும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 31,301 மாணவ, மாணவிகளுக்கும், தேசிய குழந்தை தொழிலாளர் நல பள்ளிகளில் பயிலும் 247 மாணவ, மாணவிகள் என மொத்தம் 86,974 மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா 10 முட்டைகள் வீதம் 8,69,740 முட்டைகள் வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ் உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு உண்ணும் 100 மாணவ, மாணவிகளுக்கு இன்று தலா 10 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.  

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொரோனா காலத்திலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் தேவையான பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும். கட்டயாம் முகமூடி அணிய வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாச்;சியர் திருமதி.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.சிதம்பரம், கயத்தாறு வட்டாச்சியர் திரு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன், பங்கு தந்தை திரு.அந்தோணி குரூஸ், காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆரோக்கியராஜ், முக்கிய பிரமுகர்கள் திரு.வண்டானம் கருப்புசாமி, திரு.சாமிராஜ், திரு.அய்யாத்துறைபாண்டியன், திரு.இன்னாசிமுத்து, திரு.ராஜேந்திரன், திரு.கோயில்பிள்ளை, திரு.வியாகப்பராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...