முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை வழங்கும் பணிகள் அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை வழங்கும் பணிகள் அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்.



------------------------------------------------------------------------------------------------------------



தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஒன்றியம் சிதம்பராபுரம், தெற்கு இலந்தைகுளம், அகிலாண்டபுரம், கழுகுமலை மற்றும் கோவில்பட்டி ஒன்றியம் மணியாச்சி, கரிசல்குளம், துறையூர் ஆகிய பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய 2021ம் ஆண்டிற்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் மற்றும் பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.01.2021) நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய 2021 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 960 நியாய விலைக்கடைகளிலும் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். 


நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:


தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி கொண்டாடும் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் ஆகும். இவ்விழாவை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.100 வழங்கி இத்திட்டத்தினை முதன்முதலில் தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து அம்மா அவர்கள் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கினார்கள். உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் முடங்கியபோதும் தமிழக மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக ரூ.1000 கொரோனா நிவாரண உதவி வழங்கியதுடன் 8 மாத காலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்களை இலவசமாக வழங்கினார்கள்.  மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறார்கள். கொரோனா காலத்திலும் உயிரை துச்சமென நினைத்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று களப்பணியாற்றிய நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2500 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்து 21.12.2020 அன்றே இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை , 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு மற்றும் இதற்கான வடிவமைப்பட்ட துணி பையில் வைத்து வழங்கப்படுகிறது. மேலும் ரொக்கமாக ரூ.2500 வழங்கப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 960 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 493875 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.123 கோடியே 47 லட்சம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இப்பணிகள் துவங்கி வைக்கப்படுகிறது. கே.சிதம்பராபுரம் நியாயவிலைக்கடையில் 479 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.11.98 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும், தெற்கு இலந்தைகுளம் நியாயவிலைக்கடையில் 423 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10.57 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும், கழுகுமலை கூட்டுறவு பண்டகசாலையில் 994 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.24.85 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும், கழுகுமலை தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில்  656 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.16.40 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும், கே.மணியாச்சி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில்  1445 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.36.13 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும்,  எஸ்.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில்  416 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10.40 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும், துறையூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில்  420 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10.50 லட்சமும், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று சிறப்பாக பொங்கலை கொண்டாடிட வேண்டும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா, கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா,  கூட்டுறவு இணை பதிவாளர் திரு.ரவிந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் திரு.சந்திரசேகர், திருமதி.பிரியாகுருராஜ், வட்டாட்சியர்கள் திரு.பாஸ்கரன், திரு.மணிகண்டன், கழுகுமலை செயல் அலுவலர் திரு.முருகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் திரு.மகேஷ்குமார், திரு.கணேசபாண்டியன், முக்கிய பிரமுகர்கள் திரு.அழகிரிசாமி, திரு.அற்புதராஜ், திரு.வினோபாஜி, திரு.வண்டானம் கருப்பசாமி, திரு.கருப்பசாமி, திரு.செல்வகுமார், திரு.வாசுமுத்து மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்