முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

   மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பணி நியமன ஆணை வழங்க உள்ளார்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

------------------------------------------------------------------------------------------------------------------------------


மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலை வாய்;ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இணைந்து வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.  இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடுதிறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்;ப்பு முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலைபட்டதாரி டீ.நு.இ னுipடழஅயஇ ஐவுஐ படித்தவர்கள் உள்ளிட்டஅனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.  மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்துகொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவிருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம். 

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படஉள்ளது. எனவே,மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவுபுகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். 

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கோவில்பட்டி பழையபேருந்து நிலையத்திலிருந்தும், புதிய பேரூந்து நிலையத்திலிருந்தும் கல்லூரியின் இலவசபேருந்து மற்றும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்றுவந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்புபதிவு மூப்புரத்து செய்யப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்; மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்