முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம்

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம்



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்

-----------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தெரிவித்ததாவது:

தைத்திருநாளை தமிழர் திருநாளாக ஒட்டுமொத்த தமிழ் இனமே பாரம்பரியமாக கொண்டாடி வருகிறது. தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை ஒட்டுமொத்த உலகறிய செய்திட தமிழ் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னதாக போகி பண்டிகையில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வேண்டாத பொருட்களை, வேண்டாதவைகளை அப்புறப்படுத்தி அன்றிலிருந்து புதிய வாழ்க்கை தொடர வேண்டும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை உள்ளது. பழைய பொருட்களை அப்புறப்படுத்தும் நேரத்தில் அவைகளை சிலர் குப்பைகளில் சேர்ப்பார்கள். சில பேர் தீயிட்டு கொளுத்துவார்கள். அதனால் வரும் புகையின் மூலம் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுகின்ற சூழல் ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் தமிழகத்திற்கே முன்னோடியாக தூய்மையான தூத்துக்குடி என்ற பெயரில் நமது மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சி, 19 பேரூராட்சிகள், கோவில்பட்டி, காயல்பட்டிணம் ஆகிய 2 நகராட்சிகள், தூத்துக்குடி மாநகராட்சி ஆகிய ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டமே ஒரு விழிப்புணர்வாக தமிழகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக தூய்மையான தூத்துக்குடி மூலம் தூய்மை பணிகள் அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுடன் இணைந்து  வீடுகள், அலுவலகங்கள், சுற்றுப்புற பகுதிகள், தெரு பகுதிகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கோவில்பட்டி நகராட்சியில் அதிகாலையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், வீட்டின் முன்பு வைத்து அவைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். நல்ல நிகழ்வை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தியை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். மேலும், சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து பங்கேற்றனர். 

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு பணிகளுக்காக தூய்மை பணியாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கே.ஆர். கல்லூரி மாணவ, மாணவியர்கள், லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர்கள், யோகாலயா யோகா பயிற்சி நிலைய தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் 1000க்கும் மேற்பட்டோர் மற்றும் நகராட்சி வாகனங்கள் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட டிராக்டர்கள், ஜேசிபிக்கள் இப்பணிகள் ஈடுபடுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் திரு.ராஜாராம், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிரவன், கோவில்பட்டி வட்டாட்சியர் திரு.மணிகண்டன், நகராட்சி பொறியாளர் திரு.கோவிந்தராஜ், உதவி பொறியாளர் திரு.சரவணன், சுகாதார அலுவலர் திரு.இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் திரு.சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர் திரு.அய்யாத்துரைபாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.ராமச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் திரு.அன்புராஜ், ஒன்றிய கவுன்சிலர் திரு.கோபி அழகிரி, முக்கிய பிரமுகர்கள் திரு.சுப்புராஜ், திரு.விஜயபாண்டியன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்