முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்

         

பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்
                                                                                                  தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குற்றங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அந்தந்ந காவல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு காவலர்களை கிராம விழிப்புணர்வு அதிகாரியாக நியமித்து, ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு கண்டு வருகிறார்.                                                                                                                            அவ்வாறு       அவ்வூரு கிராம    விழிப்புணர்வு கூட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தீய வழிகளில் செல்லக்கூடாது, நன்கு படித்து நல்ல நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்று கூறியருந்தார்.                                                                                                                                                                          அதன்படி பொறியியல் பட்டதாரியான ஸ்ரீவைகுண்டம் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன அசோக் சாம்ராஜ் (24) என்பவர் தனக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் முறையிட்டார்.                                                                                                                                      முறையிட்டதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன் மூலமாக தனியார் நிறுவனமான ரமேஷ் ஃபிளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன துணைத் தலைவர் திரு. சந்திரசேகரன் மற்றும் முதுநிலை மேலாளர் திரு. தெய்வநாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு மேற்படி அசோக் சாம்ராஜ்க்கு பணி வழங்க கோரியதன் அடிப்படையில் அந்நிறுவனத்தில் வாசைன திரவியம் உற்பத்தி செய்யும் பிரிவில் மெஷின் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                         அந்தப் பணியாணையை  (08.01.2021)    அன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் மற்றும் மேற்படி நிறுவனத்தினர் அசோக் சாம்ராஜ்க்கு வழங்கினர்.                                                                                                                                                                                                       பணியாணையை பெற்றுக்கொண்ட அசோக் சாம்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.   இந்நிகழ்வின்போது ரமேஷ் ஃபிளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர்,  தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து சுப்பிரமணியன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்