முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ....மாவட்ட ஆட்சியர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

   

   

.

--------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.   

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ம் தேதியும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசிலனை மார்ச் 20 தேதியும், மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22 தேதியும், வாக்குப்பதிவு ஏப்ரல் 6 தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதியும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த ஒரு அரசியல் கட்சியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. செய்திதாள்களில் விளம்பரங்கள் வெளியிட முன்கூட்டியே அனுமதி பெற்று அந்த அனுமதி எண்ணை விளம்பரத்தில் சேர்த்து வெளியிட வேண்டும். கட்சி கொடிகளை கட்டி செல்லும் வாகனங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் விளம்பரங்கள் வெளியிட முன்கூட்டியே அனுமதி பெற்று வெளியிட வேண்டும். செய்தி தாள்கள், உள்ளுர் தொலைக்காட்சிகள், வானொலி உள்ளிட்டவைகளில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் கண்காணிப்பு குழுக்களின் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு அதற்கான செலவு தொகையினை தேர்தல் விதிமுறை படி வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். முக்கிய கூட்டங்களில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசங்களில் சின்னங்கள், கட்சி விளம்பரங்கள் பொறிக்கப்பட்டால் செலவு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். 

எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மதம் மற்றும் மொழியினரிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது மற்ற அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிக்கும் போது அவரது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால பணிகள் பற்றி மட்டும் விமர்சனம் செய்தல் வேண்டும். மாறாக தனி நபர் விமர்சனம் செய்தல் கூடாது. சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக்கூடாது. வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை எந்த ஒரு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. தனிமனித சுதந்திர மற்றும் வாழ்க்கை முறைக்கு இடையூறு இ;ல்லாதவாறு தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம், பேனர் வைக்க நில உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். வழிபாட்டு தலங்கள், பள்ளி வளாகங்களில் விளம்பரம் மற்றும் பேனர் வைக்க அனுமதி இல்லை. கட்சி அலுவலகங்கள் அமைக்க இணையதளம் வாயிலாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு நாள், இடம் உள்ளிட்டவைகளை முன்கூட்டியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவரிடம் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. விதிமுறைகள் கவனத்துடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

ஆளும்கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தேர்தல் ஆணையத்தின் மூலம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்குரிய அனுமதியினை ஒற்றைச்காரளமுறையின் கீழ் ளுரஎiனாய யுpp மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்குரிய அனுமதியினை ஒற்றைச்காரளமுறையின் கீழ் ளுரபயஅ யுpp மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஊஏபைடை யிp - வாக்காளர்களிடையே பணப்பட்டுவாடா செய்தல், பரிசுப்பொருட்கள் வழங்குதல் போன்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார்களை தேர்தல் அலுவலருக்கு அளிக்கலாம். ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் ளுiபெடல ரளந pடயளவiஉ மூலம்  தயாரிக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பேனர்கள், கட்அவுட்டுகள், கொடிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியனவற்றை தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். தேர்தல் ஆணையத்தால் சொல்லப்படும் அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சிறந்த முறையில் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரகு, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் திரு.சந்தனம் (அ.இ.அ.தி.மு.க.), திரு.ரவி(தி.மு.க.) திரு.வரதராஜ்(தேசியவாத காங்கிரஸ்), திரு.முத்து(சி.பி.எம்.), திரு.மான்சிங்(பி.ஜே.பி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்