முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா நகரும் நியாய விலை கடை அமைச்சர் - .கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைப்பு .

 . 





தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் ஆவுடையம்மாள்புரம், இராமநாதபுரம் மற்றும் பட்டியூர் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலை கடை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (10.02.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு ஆவுடையம்மாள்புரம், இராமநாதபுரம் மற்றும் பட்டியூர் ஆகிய பகுதிகளில்; அம்மா நகரும் நியாய விலை கடையினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.


பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள்;  பேசியதாவது:


மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காக நான் என தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கென தனியாக குடும்பம் எதுவும் கிடையாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்திய அத்தனை திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  அவர் விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போதும் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஒரு விவசாயிக்குதான் விவசாயிகளின் கஷ்டம், பொதுமக்களின் கஷ்டங்கள் நன்றாக தெரியும். கிராமப்புற மக்கள் குடிமைப்பொருட்களை வாங்க நீண்ட தூரம் நடந்து சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்து அதற்கு அம்மா அவர்களின் பெயரை வைத்தார்கள். ஏனெனில் 2013 ஆண்டில் சென்னையில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு குடிமை பொருட்களை வழங்க நகரும் நியாய விலை கடை திட்டத்தினை முதன்முதலில் துவக்கி வைத்தார். அம்மா அவர்கள் துவக்கி வைத்த இத்திட்டம்தான் தமிழகம் முழுவதும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  எனவே இதற்கு அம்மா அவர்கள் பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றாகும்.  அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். 


ஒவ்வொரு மாதமும் தங்களது கிராமத்திற்கென ஒரு நாள் ஒதுக்கப்பட்டு அன்று இங்கு வாகனத்தில் ரேசன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வழங்கப்படும். அன்று ஏதாவது காரணத்துக்கு வாங்க இயலாத நிலை இருந்தால் நீங்கள் தாய் கடையில் எப்போதும் போல ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம்.  இப்பகுதிக்கு அரசு கொண்டு வரும் அத்தனை திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஜெ.ஜெ.எம். திட்டத்தில் இந்த கிராம பகுதிகளுக்கு அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு தேவையான வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். நீங்கள் அனைவரும் அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என பேசினார்.  


நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், மாவட்ட கவுன்சிலர் திருமதி.பிரியாகுருராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.ரவிசந்திரன், கோவில்பட்டி கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் திரு.ஜெயசீலன், வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், கூட்டுறவுத்துறை சிஎஸ்ஆர் திரு.முருகவேல், முக்கிய பிரமுகர்கள் திரு.வினோபாஜி, திரு.வண்டானம்கருப்பசாமி, திரு.செல்வகுமார், திரு.குருராஜ், திரு.பூமாரியப்பன், திரு.பிரான்சிஸ், திரு.முருகன், திரு.கிருஷ்ணசாமி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்