முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்கள்



தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன்மற்றும் நிகரி (FAX) மூலம் தெரிவிக்கலாம்.தேர்தல்பார்வையாளர் களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 

-------------------------------தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வுசெய்யவும்,தேர்தல்செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு குண்டன் யாதவ், (IRS)அவர்களை 9489947507 என்ற கைபேசி எண்ணிலும், திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு ராகேஷ் தீபக,; (IRS)அவர்களை 9489947508 என்ற கைபேசி எண்ணிலும், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு சுரேந்திர குமார் மிஸ்ரா, (IRS)அவர்களை 9489947509 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்களும் அரசியல் கட்சியனரும் புகார் அளிக்கலாம். தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம். 

பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 x 7 மணி நேரமும் இயங்கககூ; டிய தேர்தல் புகார் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                 தேர்தல்தொடர்பான புகார்களை 18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், ஹெல்ப் லைன் எண்: 1950 மற்றும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் சி விஜில் என்னும் மொபைல் ஆப் மூலமும் புகார் தெரிவிக்கலாம். 

மேற்கண்ட எண்கள் தவிர்த்து 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொது மக்கள் அளித்திடும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தேர்தல்கள் தொடர்பான புகார்களை 0461-2352990 என்ற எண்ணில் தேர்தல் பார்வையாளர்களுக்கு நிகரி (FAX } மூலமாகவும் அனுப்பலாம்.  .                                                                                                                    எனவே இதைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது    என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்