முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ,  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

---------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.05.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், இதில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்கள், சித்த மருத்துவ கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்தும் அரசு மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் வழங்குவது குறித்தும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு குறித்தும் தெரிவித்தார்கள். மேலும், தினசரி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும், காய்;ச்சல் முகாம்கள் மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்தும், கிராமப்பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி போடுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.


இக்கூட்டத்தில்  வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைiவுப்படுத்த வேண்டும். குறிப்பாக மில் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். வீட்டு தனிமையில் உள்ள கொரோனா தொற்று உள்ளவர்களை அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் 

கண்காணிக்க வேண்டும். சித்த மருத்துவ முறையில் கொரோனா பாதுகாப்பு மையம் செயல்படுவதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுவரை சித்த மருத்துவ சிகிச்சை கொரோனா பாதுகாப்பு மையத்தில் 30 சதவிதம் உள்ளனர். இதை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசிகளும் தேவையான அளவில் பெற்று போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூம்மை வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப.,  சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.முருகவேல், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு,  தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பாவலன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோ ராஜா, நகராட்சி ஆணையர்கள் திரு.ராஜாராம்(கோவில்பட்டி), திருமதி.சுகந்தி (காயல்பட்டிணம்), பேரிடர் வட்டாட்சியர் திரு.செல்வபிரசாத் மற்றும் அலுவலர்கள்  கலந்துகொண்டனர். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...