முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்

 



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை 400 நபர்களுக்கு மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  வழங்கினார்.

----------------------------



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு  மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள், காது குத்து மற்றும் முடி இறக்கும் தொழிலாளிகள் 400 நபர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை  வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4000 வழங்கியுள்ளார்கள். கொரோனா நோய் தொற்று காலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். கொரோனா நோயை கட்டுப்படுத்த பணிகளில் சிறப்பாக பணியாற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவிட்டார்கள். கொரோனா நிவாரண தொகை திருக்கோவிலில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள், காது குத்து மற்றும் முடி இறக்கும் தொழிலாளிகள் ஆகியோர்களுக்கு வழங்கி துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 நபர்களுக்கு ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப்பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கர்யம் மற்றும் உதவி கைங்கர்யம் செய்யும் சிவாச்சாரியார்கள் 57 பேர், வெங்கடாசலாபதி சன்னதி கைங்கர்யஸ்தர்கள் 12 பேர், காதுகுத்து சேவை தொழிலாளர்கள் 4 பேர், முடி இறக்கும் தொழிலாளர்கள் 61 பேர், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு கீழ் இயங்கும்  திருக்கோவில் அர்ச்சகர்கள் 251 பேர், செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் மாத சம்பளம் பெறாத திருக்கோவில் பூசாரிகள் 15 பேர் என மொத்தம் 400 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் திரு.அன்புமணி, உதவி ஆணையர் திரு.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி.ரோஜாலிசுமதா, முக்கிய பிரமுகர்கள் திரு.உமாசங்கர், திரு.நவீன்குமார், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.செங்குளிரமேஸ், திரு.வால்சுடலை, திரு.சுரேஷ், திரு.சுதாகர், திரு.இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்