முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் : மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வை

 


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

------------------------------

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டார்.  

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலி அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பழமை வாய்ந்த நாட்டு மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய மரங்களான வேம்பு, புங்கன், பூவரசு, புளி, வாகை உள்ளிட்ட 14 வகையான சுமார் 1 லட்சம் எண்ணிக்கையிலான மரங்கள் வளர்க்கப்படுகிறது. கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளுக்கு இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்த பகுதிகளில் பசுமை சூழல் ஏற்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மேலும், பருவமழை குறிப்பிட்ட காலங்களில் தவறாமல் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அந்தந்த ஊராட்சிகளில் அடர்காடுகள் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், கயத்தாறு வட்டாட்சியர் திரு.பேச்சிமுத்து, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அரவிந்தன், திருமதி.பானு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்