முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைப்பு

 


தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

----------------------------

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (04.06.2021) நடைபெற்றது. இம்முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். 


தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். அங்குள்ள பொதுமக்களிடம் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளார்கள். இத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர தடுப்பூசி போடுவது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே தடுப்பூசி போடும் அனைவரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது எப்போதும் கடைபிடிக்க வேண்டும். மிக முக்கிய அவசியமான காரணங்கள் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி பகுதியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், சாணிடைசர், பிபி கிட் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார். உடன்குடி பகுதியை சேர்ந்த அங்கு 5ம் வகுப்பு மாணவி (தகப்பனார் பெயர் திரு.அப்துல் லத்திப், தாயார் திருமதி.பைக்கரா) சமிலா தாம் சைக்கிள் வாங்க வைத்திருந்த உண்டியல் சேமிப்பு தொகை ரூ.2100ஐ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு சேர்த்திட மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் திரு.அம்புரோஸ், திரு.சதீஸ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திரு.பாபு(உடன்குடி), திரு.முகம்மதுரபிக் (காணம்), முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.எ.பி.ரமேஷ்,  திரு.பாலசிங், திரு.ஜான்பாஸ்கர், திரு.அசாப், திரு.ரவிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்