தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரின் உபயோகத்திற்காக முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 317 பேர் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இந்த கொரோனா கால ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். ஆகவே தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் முகக்கவசம், என்.95 முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை ஊர்க்காவல் படையின் வட்டார துணை தளபதி திருமதி. கெசல்யா மற்றும் உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்து அனைவருக்கும் வழங்கும்படி உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் பாபு உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக