முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை : மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வழங்கினார்





10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.




தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் குழந்தைகள் 2020ம் ஆண்டு மார்சஃஏப்ரலில் நடைபெற்ற 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசுத் தொகையும், அதே போன்று அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.


 அதன்படி 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர்கள் திருமதி. சுந்தரி மகன் சுப்பிரமணி, திரு. எபனேசர் மகன் டேவிஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் மகள் நிதிஷா, தலைமைக் காவர்கள் திரு. மாதவன் மகள் நந்திகா தேவி, திரு. சுப்பிரமணியன் மகள் தன்யா ஸ்ரீ, திரு. சிவசங்கரன் மகள் சுஷ்மிதா,   திரு. மார்த்தாண்டபூபதி மகன் மான்சிங், திருமதி. சுசிலா மகன் ஆஷிஷ் செல்வராஜ், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள் திரு. மாரியப்பன் மகள் தர்ஷினி, இளநிலை உதவியாளர் திரு. ராஜசேகர் மகள் ஸ்வேதா, 


12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. அருண்;ராஜ் மகள் ஜெயஸ்ரீ, திரு. ஆண்டனி அருள்ராஜ் மகன் ஆண்டனி ரீபேன்ஸி, தலைமைக் காவர்கள் திரு. குருமூர்த்தி மகள் ஆர்த்தி, திருமதி. இசக்கியம்மாள் மகள் ஹேமலதா, திருமதி. கலைச் செல்வி மகள் கிருத்திகா சக்தி பிரியா, திரு. முத்துகிருஷ்ணன் மகள் ஜெகஜோதி,  காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் மகள்  தர்னிகா மேக்டலின், இளநிலை உதவியாளர் திரு. சங்கரலிங்கம் மகன் செல்வப்பிரியா,


 பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தலைமைக் காவலர் திரு. கண்ணன் மகள் சிதம்பர செல்வி ஆகியோருக்கு சிறப்பு கல்வி ஊக்கத் தொகையை இன்று (09.06.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி, அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல்துறை அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் திரு. கணேச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்